ADDED : ஜூலை 03, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையைச் சேர்ந்தவர் கதிரேசன், 34.
இவருக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்ட தரிசு நில சான்றிதழ் கேட்டு வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் தர்மராஜ், 5,000 ரூபாய் தரும் படி கேட்டார். கதிரேசன், புகாரின்படி தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று, தர்மராஜை கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.