/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி
/
வெறி நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடு பலி
ADDED : ஜூன் 01, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே நெடுங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பன், 70, விவசாயி. இவர் பட்டியில் வைத்து, 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய செம்மறி ஆடுகளை, பட்டியில் அடைத்து வைத்தார். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் மேய்ச்சலுக்கு, செம்மறி ஆடுகளை கொண்டு செல்ல, பட்டிக்கு ராசப்பன் சென்றார்.
அப்போது, வெறி நாய்கள் கடித்ததில், 12 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.