/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மூதாட்டி கொலையில் 17 வயது சிறுவன் கைது
/
மூதாட்டி கொலையில் 17 வயது சிறுவன் கைது
ADDED : ஜூன் 15, 2025 02:38 AM
தென்காசி,:கடையநல்லுார் அருகே மூதாட்டியை கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
தென்காசிமாவட்டம் கடையநல்லுார் அருகே சின்னதம்பி நாடாரூரில் கடந்த நவ. 30ல் மாடு மேய்க்க சென்ற மூதாட்டி பொன்னுக்கிளியை 60, கொலை செய்த மர்மநபர் 40 கிராம் தங்க நகையை பறித்துச் சென்றார்.
இந்த சம்பவத்தில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதில் 6 மாதங்களுக்குப் பிறகு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இவர் ஐ.டி.ஐ., படித்து வருகிறார்.
மூதாட்டியின் உறவினரான சிறுவன் குடும்பத்திற்கும் மூதாட்டிக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்பாக இருந்தது. சம்பவத்தன்றும் பொன்னுக்கிளி, சிறுவனின் வீட்டு வழியே செல்லும் போது எதிர் தரப்பினரை திட்டியபடி சென்றுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவன் தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.