/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்
/
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்
ADDED : மே 27, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : சங்கரன்கோவில் அருகே மில் தொழிலாளர்கள் வந்த வேன் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமுற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தனியார் மில்லில் சங்கரன்கோவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பியபோது, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேனில் இருந்த சண்முகத்தாய், பத்திரகாளி, லட்சுமி, கோசலை, வெங்கடேஷ், வேலுச்சாமி மற்றும் ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரித்தனர்.