/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு
/
தென்காசியில் வெள்ளம் 90 ஆடுகள் மூழ்கி இறப்பு
ADDED : டிச 18, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே கம்பளியை சேர்ந்த கிருஷ்ணசாமி தோட்டத்தில் மாரியப்பன், குத்தாலராமன், சாம்பவர்வடகரையைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்தனர்.
தென்காசியில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 90க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் மூழ்கி பலியாகின.
ஆய்க்குடி பேரூராட்சி ஊழியர்கள் ஆடுகளின் உடல்களை மீட்டு, அங்கேயே புதைத்தனர்.
கால்நடை வளர்ப்போருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.