/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
2 வயது மகனை கிணற்றில் வீசி கர்ப்பிணி தற்கொலை
/
2 வயது மகனை கிணற்றில் வீசி கர்ப்பிணி தற்கொலை
ADDED : பிப் 22, 2024 02:59 AM

தென்காசி:இரண்டு வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த கர்ப்பிணி தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டினத்தைச் சேர்ந்த முருகன் மகள் காளீஸ்வரி 23. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த மாரியப்பன் 26, என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தேவிபட்டினத்தில் வசித்தனர். மாரியப்பன் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களது மகன் கவிபிரகாஷ் 2.
மாரியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான காளீஸ்வரி அதனை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று மாலை 4:00 மணிக்கு விவசாயக் கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்த காளீஸ்வரி தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை உடல் கிணற்றில் மிதப்பதை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் முதலில் குழந்தை உடலையும் பின்னர் காளீஸ்வரி உடலையும் மீட்டனர். சிவகிரி போலீசார் மாரியப்பனிடம் விசாரித்தனர்.