/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பெண்ணுக்கு 'தொல்லை' ஆட்டோ டிரைவர் கைது
/
பெண்ணுக்கு 'தொல்லை' ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஆக 20, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயது மாற்று திறனாளி பெண், தினமும் மாயமான்குறிச்சியில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார்.
இந்த பெண்ணை, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள்ராஜ் 35, தினமும் மையத்துக்கு அழைத்து சென்றார். அவர், ஆட்டோவில் பயணம் செய்தபோது அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.