/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஆரியங்காவு அருகே விபத்து அய்யப்ப பக்தர் பரிதாப பலி
/
ஆரியங்காவு அருகே விபத்து அய்யப்ப பக்தர் பரிதாப பலி
ஆரியங்காவு அருகே விபத்து அய்யப்ப பக்தர் பரிதாப பலி
ஆரியங்காவு அருகே விபத்து அய்யப்ப பக்தர் பரிதாப பலி
ADDED : டிச 05, 2024 05:01 AM

செங்கோட்டை: தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள ஆரியங்காவு பகுதியில் நேற்று அதிகாலை அய்யப்ப பக்தர்கள் வந்து கொண்டிருந்த பஸ்சும், லாரியும் மோதின. இதில், பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆரியங்காவு போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக புனலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் என்பவர் இறந்தார்.
ஐந்து பேர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 16 பேர் புனலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அய்யப்ப பக்தர்கள் சேலம் மாவட்டத்திலிருந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர். சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஆரியங்காவு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.