/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வெள்ளத்தில் சிக்கி யானைக்குட்டி பலி
/
வெள்ளத்தில் சிக்கி யானைக்குட்டி பலி
ADDED : டிச 15, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:குற்றாலம் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானைக்குட்டி மெயின் அருவி வழியே இழுத்து வரப்பட்டு இறந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரவில் அருவியை நெருங்க முடியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதில் மெயின் அருவி வழியே மூன்று வயது ஆண் யானை குட்டி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டது. மெயின் அருவி ஓடையில் லாட்ஜ் பின்புறம் அது இறந்து கிடந்தது. இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் என்பதால் துர்நாற்றம் வீசியது. போலீசார், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.