/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஆழ்வார்குறிச்சியில் கடன் பிரச்னையால் விஷம் குடித்த குழந்தை பலி
/
ஆழ்வார்குறிச்சியில் கடன் பிரச்னையால் விஷம் குடித்த குழந்தை பலி
ஆழ்வார்குறிச்சியில் கடன் பிரச்னையால் விஷம் குடித்த குழந்தை பலி
ஆழ்வார்குறிச்சியில் கடன் பிரச்னையால் விஷம் குடித்த குழந்தை பலி
ADDED : செப் 20, 2024 02:09 AM
தென்காசி:தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்லபிள்ளையார் குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு 45. நாகர்கோவிலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி உச்சிமாகாளி 40. பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்கு பழனி சக்தி குமார் 7, இந்திரவேல் 6, பிரவீன் 3 ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
உச்சிமாகாளி சுய உதவி குழுவில் கடன் பெற்றிருந்தார். பீடி சுற்றும் வருமானத்தில் வந்த தொகையை வாரம்தோறும் செலுத்தி வந்தார். சில வாரங்களாக கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. சுய உதவி குழுவினர் அவருக்கு நெருக்கடி தந்தனர். இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று காலை அரளி விதையை அரைத்து தானும் குடித்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்தார். வீட்டில் மயக்கமடைந்து விழுந்தவர்களை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பிரவீன் இறந்தார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்தனர்.