ADDED : ஜூன் 30, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: வாசுதேவநல்லுாரில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
தென்காசிமாவட்டம் வாசுதேவநல்லுாரில் வசிக்கும் செல்லத்துரை தமது வீட்டின் கழிப்பறையில் ஊறல் அமைத்து
அதில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெகதா தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். வீட்டின் கழிப்பறையில் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
12 லிட்டர் கள்ளச்சாராயமும் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் செல்லத்துரை, மனைவி வசந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.