ADDED : அக் 18, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி சொர்ணபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் அப்துல் ஹாலித் 22. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இரண்டு அடி உயரமுள்ள வாள் வைத்திருந்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் நேற்று முன்தினம் இரவில் தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மேல் விசாரணை செய்தபோது தப்பி ஓடினார்.
அவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம். போலீசார் அவரை தேடிய நிலையில் தென்காசிமாவட்டம் சேர்ந்தமரத்தில் கைது செய்யப்பட்டார்.