/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது
/
10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது
10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது
10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது
ADDED : செப் 26, 2025 03:04 AM
தென்காசி:சங்கரன்கோவில் அருகே 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகாளாம்பட்டியைச் சேர்ந்த 27 வயது நபர் ஆலையில் டிரைவராக உள்ளார். வையக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, 2023-ல் வீட்டாருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன் வேலைக்கு செல்லவில்லை.
வேறு பெண்களுடன் பழகுவதாகவும், தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும், தனது 10 மாத பெண் குழந்தைக்கும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் மனைவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.