/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மகளிர் திட்ட இயக்குநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
/
மகளிர் திட்ட இயக்குநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
மகளிர் திட்ட இயக்குநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
மகளிர் திட்ட இயக்குநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
ADDED : ஆக 11, 2025 02:39 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படும், மகளிர் திட்ட இயக்குநர் லக்குவன், 57. சுய உதவிக் குழு உள்ளிட்ட அரசின் மகளிர் திட்டங்களை கவனிக்கிறார்.
இவர், ஜூன் 25ல் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றார்.
அங்கு, வள மைய ஊழியராக பணிபுரியும், 20 வயது பெண்ணிடம், அலுவலக பதிவேடுகளை சரிபார்த்து கொண்டிருந்தார்.
பின், பெண்ணின் குடும்ப சூழ்நிலைகளை கேட்டறிந்து, அவரது மேல் படிப்புக்கு உதவுவதாக கூறி, அலுவலகத்தில், இரண்டு கட்டில்கள் போடப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு, அவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் அங்கிருந்து தப்பினார்.
அவரது புகாரில், நாங்குநேரி போலீசார், திட்ட இயக்குநர் மீது, இரண்டு பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், அவர் கைது செய்யப்படவில்லை.
லக்குவன் மாவட்ட அளவில் உயர் அதிகாரி என்பதால், விசாகா கமிட்டியிடம் ஒப்படைத்து விசாரிக்க உள்ளனர்.