/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஜூஸ் மெஷினில் சிக்கிய பெண் கை துண்டிப்பு
/
ஜூஸ் மெஷினில் சிக்கிய பெண் கை துண்டிப்பு
ADDED : ஆக 13, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி; தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில் கேரளாவை சேர்ந்த ஜிஜு, அவரது மனைவி மினி கரும்பு ஜூஸ் மெஷின் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11:00 மணியளவில் மெஷினில் சாறு அரைக்க அதனை மினி கழுவும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது இடது கை தவறுதலாக மெஷினில் உள்ளே சிக்கிக்கொண்டது.
தென்காசி தீயணைப்பு படையினர் வந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.
அருகில் உள்ள வெல்டிங் பட்டறை ஊழியரைக் கொண்டு வெல்டிங் மெஷின் மூலம் இரும்பு பாகங்களை துண்டித்து அப்புறப்படுத்தினர். பின் அவரை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.