/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பெண் மர்மச்சாவு: கணவர் மீது சந்தேகம்
/
பெண் மர்மச்சாவு: கணவர் மீது சந்தேகம்
ADDED : நவ 02, 2024 02:47 AM
தென்காசி:வாசுதேவநல்லுாரில் பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயற்சித்த போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் கலைஞர்காலனியை சேர்ந்தவர் திருமலைசாமி 38. இவரது மனைவி சசிகலா 35. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமலைசாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து பிரிந்த நிலையில் மூன்றாவதாக சசிகலாவை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு இருந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் சசிகலா மயக்கமடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
சசிகலாவை கணவர் திருமலைசாமி தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
சசிகலா உடலை வாசுதேவநல்லூர் போலீசார்பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் விசாரணை நடக்கிறது.