/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம்: குளிக்க தடை
/
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம்: குளிக்க தடை
ADDED : நவ 17, 2024 06:32 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்டியது. இதனால், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டனர். இதே போல மெயின் அருவிலும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று கார்த்திகை முதல் தேதி, சபரிமலை அய்யப்ப சீசன் துவங்கியுள்ளதால், தற்போது, குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகளவில் வர துவங்கியுள்ளது.