ADDED : ஜூன் 18, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் அன்னை முதியோர் இல்லம் நடத்தி வந்தார்.
அதில் ஆதரவற்ற முதியோர் 60க்கும் மேற்பட்டோர் தங்கியிருதனர்.
கடந்த 10ம் தேதி அங்கு அசைவ உணவு சாப்பிட்ட சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் 15 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சங்கர் கணேஷ் 48, முருகம்மாள் 45, அம்பிகா 40 , ஆகிய 3 பேர் இறந்தனர். பின்னர் தனலட்சுமி 70, என்பவரும் இறந்தார்.
இதனால் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்த 11 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சையில் இருந்த முப்பிடாதி 54, நேற்று இறந்தார்.
இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆனது.