/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தே.ஜ., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் பன்னீர்செல்வம் பேட்டி
/
தே.ஜ., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் பன்னீர்செல்வம் பேட்டி
தே.ஜ., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் பன்னீர்செல்வம் பேட்டி
தே.ஜ., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் பன்னீர்செல்வம் பேட்டி
ADDED : செப் 02, 2025 11:56 PM
தென்காசி:“நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். இருப்பினும் அடுத்ததாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொண்டர்களின் இயக்கமாக நடத்தினார். பின்னர் அது மக்கள் இயக்கமாக உருமாறியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் வாய்ப்பு பெற்றனர். இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் அவர்கள் இருவர்தான் சிறந்த முதல்வர்கள் என்பது சரித்திரம்.
நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். தமிழக அரசியல் வரலாற்றில் எல்லா கட்சிகளும் ஒருவருடன் ஒருவர் கூட்டணியில் இருந்துள்ளனர். எதிர்த்தும் நின்றுள்ளனர். வருங்காலத்தில் எத்தகைய கூட்டணி அமையும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பர். மக்கள் விரும்பும் தலைசிறந்த கூட்டணி, மக்களின் எண்ணத்திற்கேற்ப அமையும்.
பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருப்பது சரியான விளக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவர். அப்போது பூலித்தேவரின் தியாகத்தை போற்றி சென்னையில் சிலை வைக்கப்படும். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என சசிகலா கூறியிருப்பது சரி. அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழைப் பாடும் தொண்டனாக 234 தொகுதிகளிலும் வலம் வருவேன். முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார். அவரது பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
தமிழகத்தில் டி.ஜி.பி. நியமனம் சீனியாரிட்டி படி நடைபெற வேண்டும் என்பது மரபு. ஆனால் அதில் என்ன நடந்தது எனக்கே தெரியாது. நடிகர் விஜய் கட்சி தேர்தலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். என்னுடன் இதுவரை யாரும் பேசவில்லை என்றார்.