/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
புகாரை விசாரிக்காத இன்ஸ்., ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
/
புகாரை விசாரிக்காத இன்ஸ்., ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
புகாரை விசாரிக்காத இன்ஸ்., ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
புகாரை விசாரிக்காத இன்ஸ்., ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : டிச 23, 2025 04:29 AM
பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த மோனிகாவிற்கும், டாக்டர் வினோத்குமார் என்பவருக்கும், 2017 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 110 சவரன் நகைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. வினோத்குமார், சொந்த வீடு வாங்க, மோனிகாவிடம், 20 லட்சம் ரூபாய் கேட்டதில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
வினோத்குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். 2019ல் மோனிகா, ஆலங்குளம் மகளிர் போலீசில், நகைகளை மீட்டு தருமாறு அளித்த புகாரை, அப்போதைய இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ, முறையாக விசாரிக்காமல் காலம் கடத்தினார். மோனிகாவின் தந்தை அருள்லிங்கம், மாநில மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரில், ஆணைய தலைவர் கண்ணதாசன் விசாரித்து, ரோஸ்லின் சாவியோவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து, அருள் லிங்கத்திடம் வழங்க உத்தரவிட்டார்.