/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
டாஸ்மாக் செக்யூரிட்டி வீட்டில் குவிக்கப்பட்ட மதுபாட்டில்கள்
/
டாஸ்மாக் செக்யூரிட்டி வீட்டில் குவிக்கப்பட்ட மதுபாட்டில்கள்
டாஸ்மாக் செக்யூரிட்டி வீட்டில் குவிக்கப்பட்ட மதுபாட்டில்கள்
டாஸ்மாக் செக்யூரிட்டி வீட்டில் குவிக்கப்பட்ட மதுபாட்டில்கள்
ADDED : ஜன 23, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:கீழப்பாவூரில் டாஸ்மாக் செக்யூரிட்டி வீட்டில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 942 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையில் செக்யூரிட்டியாக இருப்பவர் தங்கசாமி 40. இவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 942 மது பாட்டில்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தங்கசாமியை கைது செய்தனர்.