/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பெண் தற்கொலையில் கடன் கொடுத்தவர் கைது
/
பெண் தற்கொலையில் கடன் கொடுத்தவர் கைது
ADDED : செப் 06, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சொக்கம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி 45. வீடு கட்டுவதற்காக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரிடம் ரூ 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
பணம் திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர் ரூ 12 லட்சம் மதிப்புள்ள வீட்டை தமது பெயருக்கு பத்திரம் எழுதி தரும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் செப்.1ல் லட்சுமி மலைப்பாறையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவத்தில் லட்சுமி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த மாணிக்கராஜை சொக்கம்பட்டி போலீசார் கைது செய்தனர்.