/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ரூ.22 லட்சம் மாயமானதாக புகார் கூறியவர் தற்கொலை
/
ரூ.22 லட்சம் மாயமானதாக புகார் கூறியவர் தற்கொலை
ADDED : ஜன 28, 2025 12:48 AM

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டில் இருந்து ரூ.22 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் அளித்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி அருகே சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சேர்வராயன் மகன் மாரியப்பன் 48. விவசாயக் கூலி தொழிலாளி. மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி அதே பகுதியில் வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் மாரியப்பன் வீட்டில் ரூ. 22 லட்சம் பணம் வைத்திருந்ததாகவும், அதை காணவில்லை எனவும் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் மாரியப்பனிடம் விசாரணை நடத்தினர்.
விரக்தி: ரூ.22 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக புகார் அளித்ததால் போலீசார் அவரிடமே இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி சேமித்தீர்கள் என விசாரணை மேற்கொண்டதால் அவர் விரக்தி அடைந்தார். நேற்று காலை மாரியப்பன் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

