/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மனமகிழ் மது பார்களை எதிர்த்து முற்றுகை போலீசுடன் தள்ளுமுள்ளு
/
மனமகிழ் மது பார்களை எதிர்த்து முற்றுகை போலீசுடன் தள்ளுமுள்ளு
மனமகிழ் மது பார்களை எதிர்த்து முற்றுகை போலீசுடன் தள்ளுமுள்ளு
மனமகிழ் மது பார்களை எதிர்த்து முற்றுகை போலீசுடன் தள்ளுமுள்ளு
ADDED : ஜூலை 07, 2025 03:35 AM

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான பார்கள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிறுவர்களுடன் நாம் தமிழர் கட்சியினர் திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக மதுபான பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் விலக்கிலும், ஆவுடையானூர் சாலையிலும் துவக்கப்பட உள்ள மதுபான பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்களுடன் நாம் தமிழர் கட்சியினர் பாவூர்சத்திரம் காமராஜர் சிலை முன் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் சாலையில் அமர்ந்து பெண்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.