/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தாய் தலையில் கல்லை போட்டு கொலை: சிறுவனிடம் விசாரணை
/
தாய் தலையில் கல்லை போட்டு கொலை: சிறுவனிடம் விசாரணை
தாய் தலையில் கல்லை போட்டு கொலை: சிறுவனிடம் விசாரணை
தாய் தலையில் கல்லை போட்டு கொலை: சிறுவனிடம் விசாரணை
ADDED : ஜன 04, 2025 11:10 PM
தென்காசி:மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தாய் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அருணாச்சலம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி 50. டெய்லர். இவரது மனைவி கற்பகவல்லி 45. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகன் மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தாயார் கற்பகவல்லி தலையில் குழவிக்கல்லை போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் குறித்து கடையம் போலீசார் 17 வயது சிறுவனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.