/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
/
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
ADDED : டிச 05, 2025 04:26 AM
தென்காசி: ஆலங்குளம் அருகே விசாரணைக்கு சென்ற போலீசை அரிவாளால் வெட்டியவரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொத்தையை சேர்ந்தவர் இசக்கி பாண்டி 30.
இவரது மனைவி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரை சேர்ந்தவர்.
கணவன் மனைவி இடையே பிரச்னையால் அவர் நெட்டூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இசக்கிபாண்டி நண்பருடன் நெட்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்தார்.
மாமனார் தரப்பில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் முருகன் உட்பட இருவர் வந்து விசாரித்து கண்டித்து அனுப்பினர்.
அங்கிருந்து கிளம்பிச் சென்ற இசக்கி பாண்டி, மீண்டும் நண்பருடன் நேராக புறக்காவல் நிலையம் சென்றார்.
அங்கிருந்த போலீஸ்காரர் முருகனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினார்.
பின்னர் நண்பருடன் தப்பிச் சென்று விட்டார். காயமுற்ற முருகன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் இசக்கிபாண்டி, இன்னொரு வாலிபரை தேடி வருகின்றனர்.

