ADDED : ஜன 13, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் கருத்தானுாரை சேர்ந்த பிரபல ரவுடி லெனின்.
போலீஸ் ஆவண பட்டியலில் உள்ள ரவுடி என்பதால் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறாரா என விசாரிக்க பனவடலிசத்திரம் போலீஸ்காரர் மாரிராஜா 38, சென்றார். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லெனின், போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இதில் காயமடைந்த மாரிராஜா, சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.