ADDED : ஜூலை 11, 2025 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பி.டி.ஓ., கந்தசாமி 56, தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வசித்து வருகிறார். ஜூலை 7ல் அவரது இரண்டாவது மகனுக்கு திருமணம் நடந்தது.
தென்காசியில் இருந்து தினமும் சங்கரன்கோவிலுக்கு அரசு பஸ்சில் பயணிப்பார். நேற்று காலை பஸ்சில் சங்கரன்கோவில் சென்று கொண்டிருந்தார். புளியங்குடி அருகே வந்தபோது கந்தசாமி தமக்கு படபடப்பாக வருவதாக கூறி தலை சாய்த்தார். டிரைவர் பஸ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பி.டி.ஓ., உடலுக்கு கலெக்டர் கமல்கிஷோர், அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

