/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சங்கரன்கோவில் நகராட்சி தேர்தல்; அ.தி.மு.க., ஆதரவுடன் தி.மு.க., வெற்றி

ADDED : ஆக 19, 2025 01:25 AM

தென்காசி; சங்கரன்கோவில் நகராட்சி தலைவி தேர்தலில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் தி.மு.க., வேட்பாளர் கவுசல்யா வெற்றி பெற்றார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த தி.மு.க.,வை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறப்பாக பணியாற்றவில்லை, கவுன்சிலர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அனுசரித்துச் செல்லவில்லை எனக்கூறி அவர் மீது ஜூலை 17ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பில் அவரை தோல்வியடைய செய்தனர்.
புதிய நகராட்சி தலைவியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நகராட்சியில் நடந்தது. கமிஷனர் கிங்ஸ்டன் தேர்தலை நடத்தினார். மொத்தம் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். முன்னாள் தலைவி உமா மகேஸ்வரியும் அவரது ஆதரவு கவுன்சிலர் விஜயகுமாரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மீதமுள்ள 28 பேரில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வில் 12 கவுன் சிலர்கள் இருந்தும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகளே பெற்று தோல்விடையந்தார். நகராட்சி தலைவியாக கவுசல்யா வெற்றி பெற்றதால் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.