/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வீட்டில் பதுங்கிய எஸ்.ஐ., மக்கள் மறியலால் 'சஸ்பெண்ட்'
/
வீட்டில் பதுங்கிய எஸ்.ஐ., மக்கள் மறியலால் 'சஸ்பெண்ட்'
வீட்டில் பதுங்கிய எஸ்.ஐ., மக்கள் மறியலால் 'சஸ்பெண்ட்'
வீட்டில் பதுங்கிய எஸ்.ஐ., மக்கள் மறியலால் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 22, 2025 01:48 AM

தென்காசி:தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ., சதீஷ்குமார், 36, ஜன., 18ல் வீராணத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார்.
அவரது டூ -- வீலர் வீட்டுக்கு வெளியே நின்றது. அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டை சூழ்ந்து கொள்ள, எஸ்.ஐ., மப்டி உடையில் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை மக்கள் விரட்டினர்.
இருப்பினும், எஸ்.ஐ., டூ - வீலரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஒரு போலீஸ்காரரின் டூ - வீலரில் தப்பினார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் மூன்று மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் மக்களுடன் பேச்சு நடத்தினர்.
நேற்று எஸ்.ஐ., சதீஷ்குமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவருக்கு உதவிய போலீஸ்காரர் கார்த்திக், வீரகேரளம்புதுாரிலிருந்து செங்கோட்டை ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.