/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தந்தையை கொன்று உடலை எரித்த இலங்கை அகதி கைது
/
தந்தையை கொன்று உடலை எரித்த இலங்கை அகதி கைது
ADDED : பிப் 14, 2025 02:15 AM
தென்காசி:குடும்ப பிரச்னையில் தந்தையை பாட்டிலால் தாக்கி கொலை செய்து உடலை எரித்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே போகநல்லுாரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதன் அருகில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. தென்காசி எஸ்.பி. அரவிந்த் தலைமையில் விசாரணை நடந்தது.
கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜ் 54, என தெரிய வந்தது. அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். சிவராஜுக்கும் அவரது மகன் கௌரி ராஜுக்கும் குடும்ப பிரச்னை இருந்தது. சம்பவத்தன்று இரவில் கோழி பண்ணைக்கு அழைத்து செல்வதாகக் கூறி தந்தையை டூவீலரில் அழைத்துச் சென்ற கௌரி ராஜ் அவரை பாட்டிலால் தாக்கி கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
சிவராஜின் முதல் மனைவி பிரிந்து இலங்கையில் வசிக்கிறார். அவர் இரண்டாவது மனைவியுடன் முகாமில் வசித்து வந்தார். கெளரிராஜுக்கும் திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சிவகாசி கமலி, இலங்கை அகதி சிவராஜ் ஆகியோர் எரித்துக் கொல்லப்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் எஸ்.பி., அரவிந்த் தலைமையிலான போலீசார் உடனடியாக துப்புத் துலக்கி உள்ளனர்.