/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி பா.ஜ.,வினர் பிச்சை எடுத்து போராட்டம்
/
தென்காசி பா.ஜ.,வினர் பிச்சை எடுத்து போராட்டம்
ADDED : நவ 15, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: பசு மாடுகளுக்கு வைக்கோல், புல் இல்லாததால் பட்டினி கிடக்கின்றன எனக்கூறி, பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு நகர் தலைவர் முத்துராஜ் தலைமையில் நேற்று கோவில் முன்பு, வைக்கோல் வாங்க பிச்சை எடுக்கும் நுாதன போராட்டத்தில் கட்சியினர் ஈடுபட்டனர். பொதுமக்கள் வழங்கிய பிச்சை பணத்தை வைத்து, வைக்கோல் மற்றும் புல் கட்டுகள் வாங்கி பசுகளுக்கு உணவாக வழங்கினர்.
இக்கோவிலில் கோ சாலையிலுள்ள பசு மாடுகள், முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பா.ஜ.,வினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

