/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
போலீசார் கொடூர தாக்குதல் தொழிலாளி உயிர் ஊசல்
/
போலீசார் கொடூர தாக்குதல் தொழிலாளி உயிர் ஊசல்
ADDED : பிப் 16, 2024 01:57 AM

தென்காசி:தென்காசியை சேர்ந்தவர்கள் ஆன்ட்ஸ்டன், 28, முகமது காசிம், 25. நாகர்கோவிலை சேர்ந்தவர் விஷ்ணு, 26, கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மூவரும் தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே டூ- - வீலரில் வந்தனர். மது அருந்தி இருந்த மூவரையும் போலீசார் விசாரித்தனர். அவர்களின் டூ - வீலரை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். போதையிலிருந்த ஆன்ட்ஸ்டன், டூ - வீலரை தரும்படி போலீசாரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமற்ற, 'ஆல்பா' படை எனும் போலீஸ் குழுவினரில் நான்கு பேர் தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட்டில், ஆன்ட்ஸ்டனை தரையில் தள்ளி பூட்ஸ் கால்களால் சரமாரியாக மிதித்தனர். இதில், அவர் மிகுந்த பாதிப்படைந்தார்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரை போலீசார் தாக்கும் காட்சியை, பஸ்சிலிருந்து ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து விசாரிக்க, எஸ்.பி.,சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.