/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் மரணம்
/
பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் மரணம்
பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் மரணம்
பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் மரணம்
ADDED : டிச 01, 2025 01:03 AM

தென்காசி: பைக்கில் சென்ற தம்பதி உட்பட மூவர், லாரி மோதி பலியாகினர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, 50; மெட்டல் பாலீஷ் கடை உரிமையாளர். மனைவி உஷா, 40; மெடிக்கல் கடை உரிமையாளர். சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர். இரு மகன்கள், மகள் உள்ளனர்.
சுரண்டை - சங்கரன்கோவில் ரோடு, ரெட்டைகுளம் பகுதியில் உள்ள இவர்களின் தோட்டத்திற்கு, நேற்று அதிகாலை அருள் செல்வபிரபு, உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்சி, 35, ஆகியோர் பைக்கில் சென்று, பூப்பறித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி இறந்தனர். லாரி டிரைவர் குலையநேரியை சேர்ந்த குமார், 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.

