ADDED : செப் 29, 2024 03:05 AM
தென்காசி:தென்காசி அருகே 75 வயதானவர், அவரது மனைவி, மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியை சேர்ந்தவர் முருகேசன் 50.
இவரது மனைவி பூமாரி. இவர்களுக்கு சிவா என்ற மகனும் ,சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் முருகேசன் விபத்தில் தலையில் காயமுற்றார். இதனால் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. அண்மையில் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கம்பிளியில் ஒதுக்குப்புறமாக உள்ள தோப்பில் தனியே வசிக்கும் தந்தை பரமசிவன் 75, தாய் சுடலை மாடத்தி 68, ஆகியோரது வீட்டுக்கு சென்றிருந்தார்.
மருமகளுக்கு போன் செய்து பேசிய முருகேசன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன் பிறகு தொடர்பில் இல்லை. அவரது மகன் சிவா, தாத்தாவின் தோப்பில் வந்து பார்த்தபோது தாத்தா, பாட்டி மற்றும் தந்தை ஆகியோர் வாழைப்பழத்தில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
வயது மூப்பு, மனநிலை பாதிப்பு விரக்தியில் தற்கொலை செய்ததாக ஆய்க்குடி போலீசார் தெரிவித்தார்.