/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
லாரி - டூவீலர் மோதல் இரு மாணவர்கள் பலி
/
லாரி - டூவீலர் மோதல் இரு மாணவர்கள் பலி
ADDED : மே 15, 2024 12:52 AM

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் 2 மாணவர்கள் பலியாயினர். ஒருவர் காயமுற்றார்.
சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வீரபாண்டி 16, செல்வராஜ் 15, ஸ்ரீராம் 15. மூவரும் பத்தாம் வகுப்பு தேர்வாகியுள்ளனர். விடுமுறை நாளான நேற்று மூவரும் ஒரே டூவீலரில் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி ரோட்டில் சென்றனர். நேற்று மதியம் 3.30 மணியளவில் ஆயாள்பட்டி என்ற இடத்தில் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. இதில் வீரபாண்டியும் செல்வராஜும் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே இறந்தனர். ஸ்ரீராம் காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணவடலிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

