sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ஓட்டுரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

ஓட்டுரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஓட்டுரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஓட்டுரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு


ADDED : அக் 30, 2025 03:37 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: ஜனநாயகத்தின் அடித்தளமான ஓட்டுரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நேற்று முன்தினம் இரவு முதல்வர் திருநெல்வேலி வந்தார். முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் உள்ள மருமகன் சபரீசனின் பெற்றோர் இல்லத்தில் தங்கினார். நேற்று காலை அங்கிருந்து கிளம்பிச் சென்று தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.

தென்காசியில் அரசு விழாவில் முதல்வர் பேசியதாவது,

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை 19 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தினோம். .ஆட்சியின் மீது நாள்தோறும் ஏதோ ஒரு அவதூறு பரப்பப்படுகிறது. எதிர்கட்சி தலைவர் பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் பொய் பேசுகிறார்.

விவசாயிகள் பாடுபட்ட உருவாக்கிய ஒரு நெல் மணி கூட வீணாக கூடாது என அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது.

4 ஆண்டுகளில் 1 கோடியே 70 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 336 மெட்ரிக் டன் கொள் முதல் செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 27 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

பொய்யையும் துரோகத்தையும் தவிர அவரிடம் வேறு எதும் எதிர்பார்க்க முடியாது. தினமும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூடைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

3 வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க., அரசு தான் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தது. மழைப்பாதிப்புக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் போர்கால தயாரிப்போடு அரசு உள்ளது. 3 முறை இயற்கை பேரிடர்களை இந்த அரசு சந்தித்துவிட்டது. மழை வெள்ள பாதிப்புக்காக 37 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டும் கொடுக்கவில்லை. என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கமுடியவில்லை.

இப்போது தேர்தல் ஆணையம் மூலம் சிறப்பு தீவிர வாக்கு திருத்த மசோதா என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஏற்கவே பீகாரில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். பா.ஜ.,வின் தோல்வி உறுதியானால் வாக்காளர்களையே நீக்க துணிந்தனர். அதே பார்முலாவை தமிழகத்திலும் கொண்டுவரப் பார்க்கின்றனர்.

நம்மோடு கேரளாவும் இணைந்துள்ளது. வாக்கு பறிப்பு, வாக்கு திருட்டு போன்ற பா.ஜ.,வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2 ல் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமைதான் அதனை ஒருபோதும் விட்டுகொடுக்கமாட்டோம்.

மக்களாட்சியை காக்கும் இந்த முன்னெடுப்பில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கவேண்டும்.

இவ்வாறு பேசினர்.

நிகழ்வில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு வீடு கட்டுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர்


சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் பேசிய மாணவி பிரேமா ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தில், தங்கள் வீடு ஒழுகும் நிலையில் இருப்பதாக பேசினார். அவருக்கு அரசு இல்லத்தை வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். அந்த வீடு கட்டும் பணி எவ்வாறு நடக்கிறது என நேற்று நேரில் முதல்வர் ஆய்வு செய்தார்.
பிரேமாவின் தந்தை ராமசாமி தாயார் முத்துலட்சுமியுடன் பேசி பணிகள் நடப்பதை கேட்டறிந்தார். தென்காசி அரசு விழா முடிந்ததும் ஆய்க்குடியில் உள்ள அமர் சேவா சங்கத்திற்கு வந்தார். முதல்வரை சங்க நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கலந்துரையாடினார். சமீபத்தில் எகிப்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக அளவிலான பவர் லிப்டிங் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த அமர் சேவா சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us