ADDED : ஜூன் 01, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:பாவூர்சத்திரம் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் 45. பாவூர்சத்திரத்தில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உமா 37, என்ற மனைவியும் தினேஷ் 17, திலீப் 16, என இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பரமசிவன், டீ குடிக்க கடைத் தெருவுக்கு சென்றிருந்தார். மகன்கள் மாடியில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் தனியாக துாங்கிய உமா மர்ம நபரால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அதே பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.