/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கி வைப்பு
/
ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கி வைப்பு
ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கி வைப்பு
ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கி வைப்பு
ADDED : மே 02, 2025 02:15 AM
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே, ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றி, பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்க, தொண்டு அமைப்புகள் மூலம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பூமாண்டஹள்ளி பஞ்.,ல் சென்றாயனஹள்ளி ஏரி, 26.50 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதில், ஏரியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து, கரை பகுதிகள் வலுவிழந்து காணப்பட்டது. இது குறித்து, சென்றாயனஹள்ளி மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்படி, 'மாசில்லா உலகு' தொண்டு அமைப்பின் மூலம், பூகானஹள்ளி ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கரையை பலப்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தும் பணி, மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான பணியை நேற்று, மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்து கூறுகையில், ''ஏரி முழுவதுமுள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, பறவைகளுக்கான வாழ்விடத்தை ஏரியின் கரைப்பகுதியில் ஏற்படுத்த, ஏரிக்கரை முழுவதும் பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மறுக்கன்றுகள் நடப்படும். இதன் மூலமாக, ஏரிக்கரை பகுதி பறவைகளின் வாழ்விடமாக மாறும். மரக்கன்றுகளை பாதுகாப்பது, உள்ளுர் மக்களின் முக்கிய கடமை. ஜூன், 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, தர்மபுரி மாவட்டத்தில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு நட்டு வளர்க்கப்படும் மரங்களால், அடுத்த பத்தாண்டுகளில், தர்மபுரி மாவட்டம், பசுமை நிறைந்த மாவட்டமாக மாறும்,'' என்றார்.
இதில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நிர்மல் ரவிக்குமார், காரிமங்கலம் பி.டி.ஓ.,க்கள் சர்ஹோத்தமன், நீலமேகம் மற்றும், தி.மு.க., நிர்வாகிகள் அன்பு, கண்ணபெருமாள், தொண்டு அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.