/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலை
/
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலை
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலை
வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலை
ADDED : செப் 06, 2025 08:55 PM

தென்காசி:வீட்டில், கள்ள நோட்டை தயாரித்து புழக்கத்தில் விட்ட ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், அடைக்கலப்பட்டணம், அழகாபுரியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு, 26. பட்டதாரியான இவர், தென்காசியில் ஹோட்டல் ஒன்றின் ஊழியர். இவர், தன் வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து, 500, 200 ரூபாய் கள்ள நோட்டுகளை, ஆறு மாதங்களாக அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் எஸ்.ஐ., தலைமையில், மணிகண்ட பிரபு வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில், அங்கிருந்த ஜெராக்ஸ் மிஷின், ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்படும் வெள்ளிக் கம்பிகள், ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் 7,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மோசடியில் தொடர்புடைய மணிகண்ட பிரபுவின் நான்கு நண்பர்களை தேடுகின்றனர்.