/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மலேசிய மாணவருக்கானபயன்பாட்டு மொழி பயிற்சி
/
மலேசிய மாணவருக்கானபயன்பாட்டு மொழி பயிற்சி
ADDED : ஜூலை 17, 2011 01:14 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில் மலேசிய மாணவர்களுக்கான பயன்பாட்டு மொழி பயிற்சி தொடக்க விழா நேற்று பல்கலை புலவிருந்தகத்தில் நடந்தது.
பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பதிவாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.முனைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''உலகத் தமிழ்ர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை விளங்குவது பாராட்டத்தக்கது'', என்றார்.
பதிவாளர் பன்னீர்செல்வம் பேசுகையில்,'' உலகளாவிய நிலையில் தமிழுறவு மேம்பட, மொழி வளர தமிழ்ப் பல்கலைக்கழகம் முயன்று வருகிறது. துறைபோகிய வல்லுநர்களின் அறிவாற்றலை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.மலாயப் பல்கலைக்கழக மொழிப்புல பேராசிரியர் கிருஷ்ணன் பேசுகையில்,'' தமிழகம் வந்து படிக்கிற ஒரு சிறந்த நிலை வாய்க்கப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.ஏற்பாடுகளை தமிழ்ப் பல்கலை அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறை தலைவர் போரசிரியர் கார்த்திகேயன் மற்றும் துறை போராசிரியர்கள் உதயசூரியன், பிரபாகரன், வெற்றிச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.