/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தம்பியை கொலை செய்த ரவுடியை பழிதீர்த்த அண்ணன் உட்பட 8 பேர் கைது
/
தம்பியை கொலை செய்த ரவுடியை பழிதீர்த்த அண்ணன் உட்பட 8 பேர் கைது
தம்பியை கொலை செய்த ரவுடியை பழிதீர்த்த அண்ணன் உட்பட 8 பேர் கைது
தம்பியை கொலை செய்த ரவுடியை பழிதீர்த்த அண்ணன் உட்பட 8 பேர் கைது
ADDED : மார் 15, 2025 02:42 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், 10 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்த, வழக்கில், எட்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி கிராமத்தை சேர்ந்த, குறுந்தையன், 50.இவரை மர்ம கும்பல், மார்ச் 11ம் தேதி, கொலை செய்தனர்.
அப்போது, பொதுமக்கள் மர்ம கும்பலை பிடிக்க முயன்ற போது, புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பொதுமக்களிடம் சிக்கினார். மற்றவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். கொலை குறித்து வல்லம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், தமிழ்ப் பல்கலை போலீசில், ரவுடி பட்டியிலில், குறுந்தையன் இருந்தார்.கொலையான குறுந்தையன், 2013ல் உலகநாதன், 2014ல் உதயா ஆகியோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இந்த கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில், கொலை நடந்ததாக தெரியவந்தது.
மேலும், குறுந்தையனை கொன்ற மர்மநபர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில், மொபைல் பதிவுகளை வைத்து, குறுந்தையனை கொலை செய்தவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில், மறைந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, புதுக்குடி போலீசார், தஞ்சாவூர் ஏழுப்பட்டியை சேர்ந்த ராஜா, 33, முத்துமாறன், 46,பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், 33, உட்பட ஏழு பேரை நேற்று கைது செய்தனர். இதில் ஏற்கனவே வடிவேல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதில், குறுந்தையனால் கொலை செய்யப்பட்ட உலகநாதனின் அண்ணான முத்துமாறன், தன் தம்பியை கொன்றவரை, பழித்தீர்க்கவே கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தது, கொலை செய்ய திட்டமிட்டு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.