/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போலீஸ் ஸ்டேஷன் கட்ட தொழிலதிபர் நிலம் தானம்
/
போலீஸ் ஸ்டேஷன் கட்ட தொழிலதிபர் நிலம் தானம்
ADDED : செப் 07, 2024 12:21 AM

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் போலீஸ் ஸ்டேஷன் 2021 பிப்., 13 முதல் புதிய போலீஸ் ஸ்டேஷனாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் கட்ட இடம் தேர்வு நடந்து வந்த நிலையில், சோழபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாஜகான், 68, தனக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20,000 சதுரடி நிலத்தை இலவசமாக வழங்கினார்.
நேற்று முன்தினம் திருவிடைமருதுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், அந்த இடத்தை சோழபுரம் போலீஸ் ஸ்டேஷன் பெயரில் பத்திரப்பதிவு செய்து, பத்திரத்தை, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ராஜு, திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் கரிகாலச்சோழன் ஆகியோரிடம் வழங்கினார்.
இலவசமாக இடம் வழங்கிய ஷாஜகானை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில், 'ஈத்துவக்கும் இன்பம் என வள்ளுவர் குறிப்பிட்டதற்கு எடுத்துக்காட்டாக திகழும், ஷாஜகானின் தன்னலங்கருதா மனதுக்கு என் பாராட்டுக்களும், நன்றியும்' என, பதிவிட்டு உள்ளார்.