/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பாத்திரத்தில் சாப்பாடு தர மறுத்த ஹோட்டல் மீது புகார்
/
பாத்திரத்தில் சாப்பாடு தர மறுத்த ஹோட்டல் மீது புகார்
பாத்திரத்தில் சாப்பாடு தர மறுத்த ஹோட்டல் மீது புகார்
பாத்திரத்தில் சாப்பாடு தர மறுத்த ஹோட்டல் மீது புகார்
ADDED : மே 30, 2024 01:53 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சக்திகாந்த் என்ற சமூக ஆர்வலர் மகன் ஜெய்குரு, 14, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். பெரியதெருவில் உள்ள ஹோட்டலில், நேற்று மதிய சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்கள் எடுத்துச் சென்று, பணம் கொடுத்து கேட்டார். ஹோட்டல் ஊழியர், 'பாத்திரத்தில் சாப்பாடு தர மாட்டோம்; பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம்' என்றார். அதற்கு அந்த சிறுவன், ''பிளாஸ்டிக் பைகளில் வாங்கி சாப்பிட்டால் கேன்சர் வரும்,'' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஹோட்டல் ஊழியர், சாப்பாடு தர மறுத்து அனுப்பிவிட்டார். அவரின் தந்தை வந்து கேட்ட பிறகும், பாத்திரத்தில் தர மறுத்தனர். இதையடுத்து சிறுவன் ஜெய்குரு, தன் 4 வயது தம்பி ஹேமந்துடன், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று, பாத்திரங்களில் சாப்பாடு தர மறுத்தது குறித்து புகார் அளித்தார். அப்போது அவர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அமைப்பை முதுகு, மூக்கில் கட்டி இருந்தார்.
இதனால், இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.