/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி
/
'ஸ்கூட்டி' மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி
ADDED : பிப் 26, 2025 02:01 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே விளார், ஜே.ஜி., நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர், தமிழாசிரியராகவும், தஞ்சை மாவட்ட தமிழாசிரியர் கழக செயலராகவும் உள்ளார். இவரது மனைவி அமிர்த சங்கீதா, 48; சில்லத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை.
இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தன் ஸ்கூட்டியில் வேலைக்குச் சென்றபோது, விளார் சாலையில், கொல்லாங்கரை கிராமம் அருகே, பின்னால் வேகமாக வந்த போர்வெல் லாரி, அவர் ஸ்கூட்டி மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அமிர்த சங்கீதா படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளார் சாலை குறுகலாக இருப்பதால், இந்த சாலையில் வாகனங்கள் ஒதுங்கக்கூட முடியாத நிலை உள்ளது. குறுகிய சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

