/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தம்பியை கடப்பாரையால் தாக்கி கொன்ற அண்ணனுக்கு 'ஆயுள்'
/
தம்பியை கடப்பாரையால் தாக்கி கொன்ற அண்ணனுக்கு 'ஆயுள்'
தம்பியை கடப்பாரையால் தாக்கி கொன்ற அண்ணனுக்கு 'ஆயுள்'
தம்பியை கடப்பாரையால் தாக்கி கொன்ற அண்ணனுக்கு 'ஆயுள்'
ADDED : மே 01, 2024 08:36 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே குடிகாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ், 45. இவருக்கு மனைவி கார்த்திகா மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். ரமேஷின் அண்ணன் பாஸ்கர், 62. இவர், ரமேஷ் வீட்டின் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்களின் தந்தை முத்தையன் வீரமாங்குடி பள்ளியில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பெயரில் உள்ள நிலங்களை ரமேஷ், பாஸ்கர் இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.
இருப்பினும், பாஸ்கர் தன் குடும்பத்தை முறையாக கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனால், தந்தை முத்தையன் தனக்கு வரும் பென்ஷன் தொகை மற்றும் விவசாயத்தில் கிடைக்கக்கூடிய தொகையை ரமேஷிடம் வழங்கினார்.
அவர் தன் குடும்பத்துடன் அண்ணன் பாஸ்கர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். பணத்தை தனக்கு தராமல் ரமேஷ் இருந்ததால், அண்ணன் பாஸ்கர் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், 2022, டிச., 23ல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ரமேஷின் தலையில் கடப்பாரையால், பாஸ்கர் தாக்கியதில், ரமேஷ் இறந்தார். கபிஸ்தலம் போலீசார் பாஸ்கரை கைது செய்தனர்.
கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா இந்த வழக்கை விசாரித்து பாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.

