/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெட்ரோலுடன் தண்ணீர் வாகன ஓட்டிகள் புகார்
/
பெட்ரோலுடன் தண்ணீர் வாகன ஓட்டிகள் புகார்
ADDED : ஆக 27, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவழஞ்சுழி பகுதியில் எம்.கே.வி., என்ற தனியார் பெட்ரோல் பங்க் இயங்குகிறது.
இந்த பங்கில், நேற்று வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு சிறிது துாரம் சென்றதுமே, வாகனங்கள் பழுதாகி நின்றன.
பெட்ரோலுடன், தண்ணீர் கலந்திருந்ததால், வாகனங்கள் இயங்கவில்லை.
இதையடுத்து, அந்த பெட்ரோல் பங்கில், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இழப்பீடு கோரினர்.
தகவலறிந்த சுவாமிமலை போலீசார், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

