/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சாக்குகளில் மணல் திருட்டு பைகளை கொளுத்திய மக்கள்
/
சாக்குகளில் மணல் திருட்டு பைகளை கொளுத்திய மக்கள்
ADDED : ஆக 19, 2024 07:07 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி, அய்யனார் கோவில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில், மர்ம நபர்கள் சிலர் இரவு, பகலாக சிமென்ட் சாக்கில், மணலை அள்ளி, டூ - வீலரில் கடத்துவது வாடிக்கையாக நடந்துள்ளது.
இதையறிந்த கிராம மக்கள் நேற்று டூ - வீலரில் சென்ற நபரை மறித்து விசாரித்துள்ளனர். ஆனால், டூ - வீலரில் மணல் மூட்டைக்கொண்டு வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
கிராம மக்கள் அவரை, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் அழைத்துச் சென்று விசாரித்தபோது, நுாற்றுக்கணக்கான சிமென்ட் மூட்டைகளில் மணலை அடுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்தும் போலீசார் வரவில்லை. ஆத்திரமடைந்த மக்கள், மணலை ஆற்றில் கொட்டி விட்டு, சாக்கு பைகளை தீயிட்டு கொளுத்தினர்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.

