/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஜாதி ரீதியாக பேராசிரியை பேச்சு மாணவர் எதிர்ப்பால் இடமாற்றம்
/
ஜாதி ரீதியாக பேராசிரியை பேச்சு மாணவர் எதிர்ப்பால் இடமாற்றம்
ஜாதி ரீதியாக பேராசிரியை பேச்சு மாணவர் எதிர்ப்பால் இடமாற்றம்
ஜாதி ரீதியாக பேராசிரியை பேச்சு மாணவர் எதிர்ப்பால் இடமாற்றம்
ADDED : ஆக 29, 2024 02:14 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு கல்லுாரியின் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியை, ஜெயவாணிஸ்ரீ, 48.
இவர், முதுநிலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தியபோது, ஜாதி ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ -- மாணவியர் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கடந்த 15 முதல், மாணவ -- மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கல்லுாரியின் ஆட்சி மன்றக் குழுவில், நேற்று முதல், கல்லுாரியை காலவரையின்றி மூட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியை, ஈரோடு மாவட்டம், தாளவாடி அரசு கல்லுாரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று முதல் கல்லுாரி வழக்கம் போல செயல்படும் என சென்னை கல்லுாரிக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.