/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிறுவனின் புகார் எதிரொலி அதிரடி காட்டிய அதிகாரிகள்
/
சிறுவனின் புகார் எதிரொலி அதிரடி காட்டிய அதிகாரிகள்
சிறுவனின் புகார் எதிரொலி அதிரடி காட்டிய அதிகாரிகள்
சிறுவனின் புகார் எதிரொலி அதிரடி காட்டிய அதிகாரிகள்
ADDED : மே 30, 2024 08:35 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சக்திகாந்த் என்ற சமூக ஆர்வலர் மகன் ஜெய்குரு, 14, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
பெரியதெருவில் உள்ள ஹோட்டலில், சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்கள் எடுத்துச் சென்று, பணம் கொடுத்து கேட்டார். ஹோட்டல் ஊழியர், 'பாத்திரத்தில் சாப்பாடு தர மாட்டோம்; பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம்' என கூறி திரும்பி அனுப்பி விட்டார். இதையடுத்து சிறுவன் ஜெய்குரு, தனது 4 வயது தம்பி ஹேமந்துடன் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அமைப்பை முதுகு, மூக்கில் கட்டியப்படி, பாத்திரங்களில் சாப்பாடு தர மறுத்தது குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அலுவலர்கள் பல்வேறு ஹோட்டல்கள், பேக்கரி, பழக்கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது பார்சல் உணவை பாத்திரத்தில் தர மறுத்த ஹோட்டலுக்கு சென்ற அலுவலர்கள், சம்மந்தப்பட்ட ஹோட்டல் கேஷியரிடம் பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டியது தானே. பார்சலுக்கு என்ன அளவு கொடுக்கப் போறீங்களோ அந்த அளவுதானே பாத்திரத்தில் கொடுக்கப் போகிறீர்கள் என கேட்டனர். பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் அறிவுறுத்தினர்.
மேலும், அந்த ஹோட்டலில் கிச்சன் தரை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனைத் தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்ற ஹோட்டல்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் கேப் அணிந்தும், கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்துள்ள உணவுகளை எப்போதும் இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
பிறகு பேக்கரி ஒன்றில் ஆய்வு நடத்திய போது, பூஞ்சானம் பிடித்து சாப்பிட தகுதியற்ற ஐந்து கிலோ கேக்கு, மூன்று கிலோ அழுகிய பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இப்படியாக நான்கு கடைகளுக்கு மொத்தம் 6 ஆயிரம் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்.